Link to original Article
அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகளிலிருந்து இரு பாலரையும் பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் , பெண்கள் பழிவாங்கும் நோக்கில் ஆண்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார்கள் என்றால், புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதியின் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் அளிக்கும் புகார்கள் விசாரணை கமிட்டி மூலம் விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும் என்றும் தீய எண்ணத்துடன் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார் அளித்து இருந்தால், அந்தப் பெண் மற்றும் ஆண் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் செய்யும் குற்றங்களின் அடிப்படையில் மன்னிப்புக் கடிதம் கேட்பது, எழுத்து மூலம் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது முதல் பணியிலிருந்தே நீக்குவது வரை இருபாலர் மீதும் நடவடிக்கைகள் பாயும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment