Link to original Article - Dinamani
தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்துள்ள மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீûஸ, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர், மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் வழங்கியுள்ளனர்.
இதேபோல், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, மீரா குமாரிடம் தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள தெலங்கானா பகுதிகளைப் பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவுக்கு அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான சாம்பசிவ ராவ், சப்பம் ஹரி, அருண் குமார், சாய் பிரதாப், ராஜகோபால், ஹர்ஷகுமார் ஆகிய 6 பேர், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அனுமதி கோரி, அதற்கான நோட்டீûஸ மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களான நாராயண ராவ், சிவபிரசாத், நிம்மாலா கிறிஸ்டப்பா, வேணுகோபால ரெட்டி ஆகியோரும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களான அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேகபதி ராஜமோகன் ரெட்டி, எஸ்.பி.ஒய். ரெட்டி ஆகிய 3 பேரும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான நோட்டீûஸ மீராகுமாரிடம் தனித்தனியாக வழங்கினர்.
பிற கட்சிகளுடன் பேச்சு: இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, நோட்டீஸ் அளித்துள்ள சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தேவையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், மத்திய காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற, தங்களது நடவடிக்கைக்கு பிற கட்சிகளும் ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டனர். சிவசேனா, அஇஅதிமுக, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தெலுங்கு தேசம் கட்சி பேசி வருவதாகவும் அக்கட்சியின் எம்.பி. வேணுகோபால ரெட்டி குறிப்பிட்டார்.
புதிய பிரச்னை: 15வது மக்களவை கூட்டத் தொடரில், இதுவரை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் மக்களவையில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, 50 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 19 எம்.பி.க்களே இருந்ததால், அவரது முயற்சி பலனிக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால், தற்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீûஸ காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 6 பேரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 4 பேரும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரும் அளித்துள்ளனர். இதற்கு பிற கட்சிகள் ஆதரவு அளிக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், தெலங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவுக்கு எதிராக அக்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகவே இது கருதப்படுகிறது. இதனால் தில்லி அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment