Pages

Wednesday, December 11, 2013

காணவில்லை..!!! காணவில்லை...! காணவில்லை..!

காணவில்லை..!!! காணவில்லை...! காணவில்லை..!


இஸ்லாமிய சட்டம் காட்டு மிராண்டி சட்டம் என்று - டிவியில் பிச்சை எடுத்து வயிற்றை கழுவ கூவி திரிந்த ஊடக விமர்சகர்கள் காணவில்லை.. ..! ஏதாவது முஸ்லிம் நாடுகளில் - தீர விசாரிக்க பட்டு தண்டனை கொடுக்கபட்டால் - கொடுக்கு மாறி - டிவியில் - வந்து அவன் கொடுக்கும் எச்சி காசை வாங்கி கொண்டு தூற்றும் கயவர்கள் ஊடக விமர்சக வெங்காயங்கள் தலைமறைவு. என் சிங்கபூர் தண்டனையே பற்றி - இந்த வெங்காயங்கள் பேசாவில்லை? சிங்கப்பூர் சாலை விபத்தில் தமிழர் மரணம் : கலவர வழக்கில் இன்று மேலும் 8 பேர் கைது 7 வருட சிறைதண்டனை + ரோத்தான் சவுக்கடி சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் சக்திவேல் குமாரவேலு (33) என்ற தமிழர் பலியானார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது 16 போலீஸ் வாகனங்கள் உட்பட 25 வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதில் 39 போலீசாரும் பொதுமக்களும் காயமடைந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட இந்த கலவரம் இரண்டு மணிநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடுமையான சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்படும் சிங்கப்பூரில் 40 வருடங்களுக்கு முன்புதான் இதுபோன்ற கலவரம் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் வெளிநாட்டவர் 3 பேர் உள்பட 24 இந்தியர்களும் நேற்று கைதுசெய்யப்பட்டனர். கலவரத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து இன்றும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அதிகமானோர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் 3 வாகனங்களில் இன்று நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றனர். மிகவும் சோகத்துடன் காணப்பட்ட அவர்களில் 24 பேர் மீது மோசமான கலவர வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவானது தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 7 வருட சிறைதண்டனையும், ரோத்தான் அடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த விசாரணை வரும் 17-ம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்த விசாரணைக்குழு இந்த வார இறுதியில் அமைக்கப்படும். கைது செய்யப்பட்டவர்களுக்கு வாதாட 10 வழக்கறிஞர்கள் முன்வந்து இருக்கின்றனர்

No comments:

Post a Comment