Pages

Friday, December 27, 2013

நேர்மையான தனியொரு மனிதன் ஒரு பெரும் படைக்கு சமமானவன்..

Link to Original Article 
01. நான் என் தொழில்முறை நேரத்தைத்தான் விற்கிறேன் அதற்காக என் மனச்சாட்சியை விற்கவில்லை என்று ஆபிரகாம் லிங்கன் கூறியதை தினசரி மனதில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
02. நாம் நமது நோக்கங்களை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுகிறோம் ஆனால் உலகமோ நமது செயற்பாடுகளை வைத்தே நம்மை மதிப்பிடுகிறது.
03. எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
04. யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
05. பெற்றோரின் அறிவுரைகளை புறக்கணிக்கும் பிள்ளைகள் வாழ்வின் பிற்பகுதியில் அதற்கான விலையைத் தரவேண்டியிருக்கும்., அது மிக அதிகமானதாக இருக்கும்.
06. நாடுகளும், நாகரிகங்களும் அங்கு வாழ்வோரின் பண்பு நலங்களினால்தான் உருவாகின்றன.
07. நற்பண்பை அவ்வப்போது பின்பற்றுவதைவிட, எப்போதும் பின்பற்றுவதுதான் எளிதானது. நற்பண்பு தன்மானத்தை உருவாக்குகிறது, தன்மானம் சுயமரியாதைக்கு இட்டுச் செல்கிறது.
08. அதிகாரத்தில் இல்லாதவர்களை விட, அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் ஒழுங்கான நடத்தை நடக்க வேண்டும். காரணம் மக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் பின்பற்றி நடக்க முனைகிறார்கள்.
09. நவீன அறிவியல் தொழில் நுட்பம் கூட நல்ல பண்பு நலன் இல்லாதவர்களிடம் இருந்தால் நல்லபடியாக செயற்பட முடியாது.
10. நன்மை – தீமை இரண்டும் நம் வாழ்வில் மோதிக்கொண்டே இருக்கின்றன. அதில் எதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு நமது கையிலேயே இருக்கிறது. தீமையை வெற்றிபெறச் செய்வது இலகு, அதனால்தான் உலகம் தீயவர்களால் நிறைந்து கிடக்கிறது. ஆகவே நன்மையை வெற்றிபெறச் செய்யவே போராட வேண்டும்.

No comments:

Post a Comment