Link to Original Article
பாதுகாப்பு என்ற போர்வையில் உயிர் பலியை நவீன இயந்திர முறையில் செய்ய உருவாக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்தவர் மிகைல் கலாஷ்னிகோவ் என்பவர் . தனது 94ம் வயதில் நேற்று மரணமடைந்தார். ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்தவர் மிகைல் கலாஷ்னிகோவ். 1919 ஆம் ஆண்டு மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்யாவில் பிறந்தவர் . மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்ய ராணுவ படைக்கு ஆயுதங்களை வடிவமைக்கும் பணியில் இருந்தவர் . மிகவும் பிரபலமான உயிர் கொள்ளும் இயந்திரமான ஏ.கே.47 இவரால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது . 94 வயதான மிகைல் கலாஷ்னிகோவ் வயோதிகம் காரணமாக பலகீனம் அடித்தார் . சில நாட்களுக்கு முன்னிருந்து உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது . மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் . துப்பாக்கி குண்டு உடலில் துளைத்து ரத்தம் கசிந்து வெளியேறி உயிர் இழப்பு ஏற்படுகிறது . எத்தனையோ உயிர்கள் குண்டடி பட்டு இறந்தன என்றால் அதில் முக்கிய பங்கு ஏ.கே.47 க்கு உண்டு எனலாம் . மிகைல் கலாஷ்னிகோவ் இரண்டாம் உலகப்போருக்கு பிறகே இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார். நல்ல வேளை , ஜெர்மனியை சுற்றி இருந்த பல மக்கள் தப்பித்து கொண்டனர் . மிகைல் கலாஷ்னிகோவ் வின் இந்த நவீன உயிர் கொல்லும் கருவியின் கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல் கலாஷ்னிகோவ் , ‘எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது , மிகவும் வருத்தமாக உள்ளது' எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment