Pages

Thursday, December 26, 2013

இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக்குகள்

Link to Original Article 
சுஸுகி ஹயபுசா டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம் உலக அளவில் அதி பிரசித்தி பெற்ற இந்த சூப்பர் பைக்கில் 1340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 260 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.13.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக்கில் 1,441சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 197 பிஎச்பி ஆற்றலையும், 162 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 10 கிமீ. 265 கிலோ எடையுடன் அசுர பலம் வாய்ந்த பைக்கின் தோற்றமும் அவ்வாறே. ரூ.16.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 305 கிமீ வேகம் இந்த சூப்பர் பைக்கில் 193 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 178 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.18.02 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அப்ரிலியா ஆர்எஸ் வி4 ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம் இந்த சூப்பர் பைக்கில் 184 பிஎச்பி ஆற்றலையும், 117 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக்கின் மைலேஜும் லிட்டருக்கு 10 கிமீ. 186 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.21.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஹோண்டா சிபிஆர் வரிசையிலான இந்த சூப்பர் பைக்கில் 177 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபயர்பிளேடு என்றும் அழைக்கப்படும் இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் வியக்க வைக்கிறது. அதுதான் ஹோண்டாவின் தொழில்நுட்பம். பவர் மற்றும் மைலேஜ் இரண்டையும் சாத்தியப்படுத்தும் இந்த சூப்பர் பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 199 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.46 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவாஸாகி இசட்10ஆர் டாப் ஸ்பீடு: 295 கிமீ வேகம் சமீபத்தில் கவாஸாகி அறிமுகம் செய்த இரண்டு சூப்பர் பைக்குளில் ஒன்று இது. இந்த பைக்கில் 197 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 198 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000 டாப் ஸ்பீடு: மணிக்கு 288 கிமீ வேகம் ஹயபுசா புகழ் சுஸுகியின் 191 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த சுஸுகி சூப்பர் பைக் ரூ.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1 டாப் ஸ்பீடு: மணிக்கு 285 கிமீ வேகம் 180 பிஎச்பி ஆற்றலையும், 115.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 206 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.12.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அப்ரிலியோ டுவோனோ வி4ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 270 கிமீ வேகம் பியாஜியோவின் அங்கமான அப்ரிலியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் இந்த சூப்பர் பைக்கில்167 பிஎச்பி ஆற்றலையும், 111.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 183 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.19.32 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டுகாட்டி டயாவெல் டாப் ஸ்பீடு: மணிக்கு 260 கிமீ வேகம் உலக அளவில் பல நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். செம ஸ்டைலான இந்த இந்த சூப்பர் பைக்கில் 162 பிஎச்பி ஆற்றலையும், 127.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1198சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.25.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

No comments:

Post a Comment