Link to Original Article
சாலையில் பார்த்து கவனமாக போ மகனே என்ற குரல் . சாலைக்கு மட்டும் கவனம் இருந்தால் போதுமா நண்பர்களே . பாட சாலையிலும் அதே கவனம் இருப்பது நல்லது . குளிர் காலம் , வசந்த காலம் , மழை காலம் என்ற வரிசையில் இது தேர்வு காலம் . தேர்வு காலம் என்பதை விட தேர்வு திருவிழா என்று சொல்வது தான் முறையாக இருக்கும் . ஒரு வருட உழைப்பின் பலனை அறிவிப்பதே இந்த தேர்வு தானே . பேப்பர் , பேனா , மை , கடிகாரம் , அளவு கோல் திருவிழாக்களை சிறப்பாக சித்து முடிக்க உதவுகின்றன . காலை விழித்தவுடன் அறிவுக்கு விருந்து கொடுப்பதை விட பெரிய விருந்து ஒன்றும் இல்லை . காலையில் சாப்பிட்ட விருந்தை மாலையில் அசை போடுவதும் ஒரு தனி சுகம் தான் . ஒரு மாணவனுக்கு தாய் , தந்தை , ஆசிரியர் , நண்பன் இவர்களை விட சிறந்த தூண்டு கோல் இருக்க முடியுமா . நான் எதற்காக கல்வி கற்கிறேன் என்று ஒரு மாணவன் கேட்டல் அவன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் என்பது உறுதி . நான் யாருக்காக கல்வி கற்கிறேன் என்று ஒரு மாணவன் கேட்டல் அவன் சமுதாய சிந்தனை பெற்று விட்டன என்பதே உண்மை . 1+1 என்பதை கூட்டல் செய்தால் 2 வரும் என்பது கணிதவியல் . நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்யும் பொது அது இன்னும் அதிகரிப்பது வாழ்வியல் . புரிந்து படிப்பது என்பது தனி சுவை . சுவையான உணவை தானே நாம் அனைவரும் விரும்புவோம் . சிந்தனை செய் மனமே .
No comments:
Post a Comment