Pages

Thursday, December 26, 2013

கோவா கடற்கரை எழில்கள்...

Link To Original Article 
01. கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.
02. கோவாவில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள்.
03. பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள்.
04. கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
05. கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய்  வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
06. கேண்டலிம் மற்றும் அஞ்சுனா கடற்கரைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே காணக்கூடிய செகண்ட் ஹெண்ட் மார்க்கெட் மிகவும் பிரபலம்.
07. கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைகளில் தரகர்கள் மற்றும் முகவர்களை தொடர்பு கொண்டு ஜெட்ஸ்கை, பனானா ரைட் என்று நீங்கள் உங்களுக்கு விருப்பமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.
08. பிரிட்டோஸ் என்ற குடில் பாகா கடற்கரையில் உள்ள குடில்களில் மிகவும் புகழ்பெற்றது.
09. வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும். இங்கு நீங்கள் உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.
10. அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்.
11. கோவாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தெற்கு கோவா பரபரப்பில்லாத வாழ்க்கை முறையையே கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் புகழ்பெற்ற தேவாலயங்கள் சிலவற்றையும், அமைதியான கடற்கரைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
12. கோவாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்றான கோல்வா பீச்சும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கிறது. கோவாவின் பரபரப்பான வாழ்க்கை முறையை விரும்பாத குடும்பங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களுடைய விடுமுறையை கழிக்க தெற்கு கோவா மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
13. கோவாவின் மாலை நேரம் முழுவதுமாக கேளிக்கை விரும்பிகளின் சுவர்கமாக மாறிப்போயிருக்கும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளிலும், பப்களிலும் அதிகாலை மூன்று மணி வரை பாடல்களின் ஒலி காதை துளைக்கும். அதிலும் குறிப்பாக வடக்கு கோவாவில், கலங்கூட் பீச்சுக்கு அருகே உள்ள கஃபே டிட்டோஸ் மற்றும் மாம்போஸ் இரவு விடுதிகளில் கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.
14. சில கடற்கரை குடில்களிலும் இரவு விருந்துகள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கும். ஆனால் நகரத்தை வீட்டு நெடுந்தூரம் கடற்கரைகளில் செல்வதால் திரும்பி வர கேப் வசதிகள் ஏதுமின்றி நீங்கள் தடுமாறும் நிலை ஏற்படலாம்.
15. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது. இந்த நகரத்தை தேடி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள், இரவு விடுதி மற்றும் கடற்கரைகளை தாண்டி கோவாவில் காணக்கூடிய சுதந்திரத்தையும், குழப்பமான வீதிகளையும், நகரின் வெப்பநிலையையும், அங்கங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியத்தன்மையையுமே பெரிதும் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment