Pages

Friday, December 27, 2013

நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் விபத்து - 23 பேர் உயிர் இழப்பு

Link to Original Article
தென் இந்திய  ரயில்வே கட்டுபாட்டி உள்ள நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் இன்று அதிகாலை  3:30 தீ விபத்திற்கு உள்ளானது . இந்த விபத்தில் 223 பேர் பலியாகியுள்ளனர் .  நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது . தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது . இன்று அதிகாலை 3:30 B 1 குடிசாதனா வசதியுள்ள பெட்டியில் இருந்து தீ பரவி இருக்கும் என சந்தேகிக்க படுகிறது . தீ விபத்தில் காயமடைந்த 12 பேர் அருகில் உள்ள தர்மாவரம் , புட்டபர்த்தி  மற்றும்  அனந்தபூர் பகுதியில் உள்ள மருத்துவமையில் சிகிச்சை அளிக்க படுகிறது என அங்கிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிகின்றன . தீ விபத்து குறித்து தெரிந்துகொள்ள உதவி எண் தரப்பட்டுள்ளது . பெங்களூர் : 08022354108, 08022259271, 08022156554, 08022156553 ,ரயில்வே : 9731666863 .

நேர்மையான தனியொரு மனிதன் ஒரு பெரும் படைக்கு சமமானவன்..

Link to Original Article 
01. நான் என் தொழில்முறை நேரத்தைத்தான் விற்கிறேன் அதற்காக என் மனச்சாட்சியை விற்கவில்லை என்று ஆபிரகாம் லிங்கன் கூறியதை தினசரி மனதில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
02. நாம் நமது நோக்கங்களை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுகிறோம் ஆனால் உலகமோ நமது செயற்பாடுகளை வைத்தே நம்மை மதிப்பிடுகிறது.
03. எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
04. யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
05. பெற்றோரின் அறிவுரைகளை புறக்கணிக்கும் பிள்ளைகள் வாழ்வின் பிற்பகுதியில் அதற்கான விலையைத் தரவேண்டியிருக்கும்., அது மிக அதிகமானதாக இருக்கும்.
06. நாடுகளும், நாகரிகங்களும் அங்கு வாழ்வோரின் பண்பு நலங்களினால்தான் உருவாகின்றன.
07. நற்பண்பை அவ்வப்போது பின்பற்றுவதைவிட, எப்போதும் பின்பற்றுவதுதான் எளிதானது. நற்பண்பு தன்மானத்தை உருவாக்குகிறது, தன்மானம் சுயமரியாதைக்கு இட்டுச் செல்கிறது.
08. அதிகாரத்தில் இல்லாதவர்களை விட, அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் ஒழுங்கான நடத்தை நடக்க வேண்டும். காரணம் மக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் பின்பற்றி நடக்க முனைகிறார்கள்.
09. நவீன அறிவியல் தொழில் நுட்பம் கூட நல்ல பண்பு நலன் இல்லாதவர்களிடம் இருந்தால் நல்லபடியாக செயற்பட முடியாது.
10. நன்மை – தீமை இரண்டும் நம் வாழ்வில் மோதிக்கொண்டே இருக்கின்றன. அதில் எதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு நமது கையிலேயே இருக்கிறது. தீமையை வெற்றிபெறச் செய்வது இலகு, அதனால்தான் உலகம் தீயவர்களால் நிறைந்து கிடக்கிறது. ஆகவே நன்மையை வெற்றிபெறச் செய்யவே போராட வேண்டும்.

Thursday, December 26, 2013

கோவா கடற்கரை எழில்கள்...

Link To Original Article 
01. கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.
02. கோவாவில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள்.
03. பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள்.
04. கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
05. கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய்  வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
06. கேண்டலிம் மற்றும் அஞ்சுனா கடற்கரைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே காணக்கூடிய செகண்ட் ஹெண்ட் மார்க்கெட் மிகவும் பிரபலம்.
07. கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைகளில் தரகர்கள் மற்றும் முகவர்களை தொடர்பு கொண்டு ஜெட்ஸ்கை, பனானா ரைட் என்று நீங்கள் உங்களுக்கு விருப்பமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.
08. பிரிட்டோஸ் என்ற குடில் பாகா கடற்கரையில் உள்ள குடில்களில் மிகவும் புகழ்பெற்றது.
09. வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும். இங்கு நீங்கள் உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.
10. அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்.
11. கோவாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தெற்கு கோவா பரபரப்பில்லாத வாழ்க்கை முறையையே கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் புகழ்பெற்ற தேவாலயங்கள் சிலவற்றையும், அமைதியான கடற்கரைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
12. கோவாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்றான கோல்வா பீச்சும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கிறது. கோவாவின் பரபரப்பான வாழ்க்கை முறையை விரும்பாத குடும்பங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களுடைய விடுமுறையை கழிக்க தெற்கு கோவா மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
13. கோவாவின் மாலை நேரம் முழுவதுமாக கேளிக்கை விரும்பிகளின் சுவர்கமாக மாறிப்போயிருக்கும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளிலும், பப்களிலும் அதிகாலை மூன்று மணி வரை பாடல்களின் ஒலி காதை துளைக்கும். அதிலும் குறிப்பாக வடக்கு கோவாவில், கலங்கூட் பீச்சுக்கு அருகே உள்ள கஃபே டிட்டோஸ் மற்றும் மாம்போஸ் இரவு விடுதிகளில் கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.
14. சில கடற்கரை குடில்களிலும் இரவு விருந்துகள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கும். ஆனால் நகரத்தை வீட்டு நெடுந்தூரம் கடற்கரைகளில் செல்வதால் திரும்பி வர கேப் வசதிகள் ஏதுமின்றி நீங்கள் தடுமாறும் நிலை ஏற்படலாம்.
15. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது. இந்த நகரத்தை தேடி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள், இரவு விடுதி மற்றும் கடற்கரைகளை தாண்டி கோவாவில் காணக்கூடிய சுதந்திரத்தையும், குழப்பமான வீதிகளையும், நகரின் வெப்பநிலையையும், அங்கங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியத்தன்மையையுமே பெரிதும் விரும்புகின்றனர்.

ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்!!!

Link To Original Article 
வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.

ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.

முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

புதிய அறிவியல் உண்மைகள் !!!


Link To Original Article 


வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.
வௌவால் வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

எம்பயர் ஸ்டேட் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.

சுத்தமான தண்ணீர் சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மருக்கள் மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம் மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக அரசு தகவல் பெரும் வசதி!!!

Link TO Original Article 
கைக்குழந்தை என்றழக்க தகுதி பெற்று விட்ட செல்போன் மூலமாகவே அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் அச்சு பிரதி களுக்குப் பதிலாக செல்போன் எஸ்.எம்.எஸ்., இ-மெயில் தகவல்களை காண்பித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் 100 துறைகளில் செல்போன் சேவை திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக்குகள்

Link to Original Article 
சுஸுகி ஹயபுசா டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம் உலக அளவில் அதி பிரசித்தி பெற்ற இந்த சூப்பர் பைக்கில் 1340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 260 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.13.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக்கில் 1,441சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 197 பிஎச்பி ஆற்றலையும், 162 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 10 கிமீ. 265 கிலோ எடையுடன் அசுர பலம் வாய்ந்த பைக்கின் தோற்றமும் அவ்வாறே. ரூ.16.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 305 கிமீ வேகம் இந்த சூப்பர் பைக்கில் 193 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 178 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.18.02 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அப்ரிலியா ஆர்எஸ் வி4 ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம் இந்த சூப்பர் பைக்கில் 184 பிஎச்பி ஆற்றலையும், 117 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக்கின் மைலேஜும் லிட்டருக்கு 10 கிமீ. 186 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.21.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஹோண்டா சிபிஆர் வரிசையிலான இந்த சூப்பர் பைக்கில் 177 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபயர்பிளேடு என்றும் அழைக்கப்படும் இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் வியக்க வைக்கிறது. அதுதான் ஹோண்டாவின் தொழில்நுட்பம். பவர் மற்றும் மைலேஜ் இரண்டையும் சாத்தியப்படுத்தும் இந்த சூப்பர் பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 199 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.46 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவாஸாகி இசட்10ஆர் டாப் ஸ்பீடு: 295 கிமீ வேகம் சமீபத்தில் கவாஸாகி அறிமுகம் செய்த இரண்டு சூப்பர் பைக்குளில் ஒன்று இது. இந்த பைக்கில் 197 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 198 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000 டாப் ஸ்பீடு: மணிக்கு 288 கிமீ வேகம் ஹயபுசா புகழ் சுஸுகியின் 191 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த சுஸுகி சூப்பர் பைக் ரூ.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1 டாப் ஸ்பீடு: மணிக்கு 285 கிமீ வேகம் 180 பிஎச்பி ஆற்றலையும், 115.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 206 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.12.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அப்ரிலியோ டுவோனோ வி4ஆர் டாப் ஸ்பீடு: மணிக்கு 270 கிமீ வேகம் பியாஜியோவின் அங்கமான அப்ரிலியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் இந்த சூப்பர் பைக்கில்167 பிஎச்பி ஆற்றலையும், 111.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 183 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.19.32 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டுகாட்டி டயாவெல் டாப் ஸ்பீடு: மணிக்கு 260 கிமீ வேகம் உலக அளவில் பல நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். செம ஸ்டைலான இந்த இந்த சூப்பர் பைக்கில் 162 பிஎச்பி ஆற்றலையும், 127.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1198சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.25.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

உயிர்களை கொள்ள ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் மரணம்!!!


Link to Original Article 


பாதுகாப்பு என்ற போர்வையில் உயிர் பலியை நவீன இயந்திர முறையில் செய்ய உருவாக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்தவர் மிகைல் கலாஷ்னிகோவ் என்பவர் .  தனது 94ம் வயதில் நேற்று மரணமடைந்தார். ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்தவர் மிகைல் கலாஷ்னிகோவ்.  1919 ஆம் ஆண்டு மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்யாவில் பிறந்தவர் . மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்ய ராணுவ படைக்கு ஆயுதங்களை வடிவமைக்கும் பணியில் இருந்தவர் . மிகவும் பிரபலமான உயிர் கொள்ளும் இயந்திரமான  ஏ.கே.47  இவரால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது .  94 வயதான மிகைல் கலாஷ்னிகோவ் வயோதிகம் காரணமாக பலகீனம் அடித்தார் . சில நாட்களுக்கு முன்னிருந்து உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது . மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் . துப்பாக்கி குண்டு உடலில் துளைத்து ரத்தம் கசிந்து வெளியேறி உயிர் இழப்பு ஏற்படுகிறது . எத்தனையோ உயிர்கள் குண்டடி பட்டு இறந்தன என்றால் அதில் முக்கிய பங்கு ஏ.கே.47 க்கு உண்டு எனலாம் . மிகைல் கலாஷ்னிகோவ்  இரண்டாம் உலகப்போருக்கு பிறகே இந்த  ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார். நல்ல வேளை , ஜெர்மனியை சுற்றி இருந்த பல மக்கள் தப்பித்து கொண்டனர் .  மிகைல் கலாஷ்னிகோவ் வின் இந்த நவீன உயிர் கொல்லும் கருவியின் கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல் கலாஷ்னிகோவ் , ‘எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது , மிகவும் வருத்தமாக உள்ளது' எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்களிடமிருந்து ஆண்களைக் காப்பாற்றும் புதிய சட்டம்!!!

Link to original Article 
அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகளிலிருந்து இரு பாலரையும் பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று  முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் , பெண்கள் பழிவாங்கும் நோக்கில் ஆண்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார்கள் என்றால், புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதியின் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் அளிக்கும் புகார்கள் விசாரணை கமிட்டி மூலம் விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும் என்றும் தீய எண்ணத்துடன் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார் அளித்து இருந்தால், அந்தப் பெண் மற்றும் ஆண் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் செய்யும் குற்றங்களின் அடிப்படையில் மன்னிப்புக் கடிதம் கேட்பது, எழுத்து மூலம் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது முதல் பணியிலிருந்தே நீக்குவது வரை இருபாலர் மீதும் நடவடிக்கைகள் பாயும் என்று கூறப்படுகிறது.

2004ல் சுனாமி பேரலையில் மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாய்!!!

Link to original Article
சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன . கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி சுமத்திரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியது. இதில் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2004ம் ஆண்டு உண்டான சுனாமி பேரலையில் சிக்கி கணவரை இழந்த பெண் ஒருவர், அப்போது மாயமான தனது 3 மகள்களும் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார். சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த செண்பகவள்ளி (50)யின் கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004-ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்கிருந்து டிசம்பர் மாதம் 25-ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக அவர்கள் சுனாமி பேரலையில் சிக்கியுள்ளனர். இதில் மீட்புக் குழுவால் காயங்களுடன் மீட்கப் பட்ட கோவிந்தசாமி, இறக்கும் தருவாயில் தனது மகள்கள் சுனாமியில் சிக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றத் தகவலை மனைவியிடம் தெரிவித்துள்ளார். கணவர் சொன்னபடி இன்னும் தனது மகள்கள் மூவரும் உயிரோடு எங்கோ வாழ்ந்து வருவதாக நம்பும் செண்பகவள்ளி, சுனாமி தாக்கி 9 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னமும் தன் மகள்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார். இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என அவர் தேடி வருகிறார். இதுபற்றி செண்பகவள்ளியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார். அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும் என நாமும் அவருக்காக பிரார்த்தித்துக் கொள்வோம்.

தேங்கி கிடக்கும் 500 மில்லியன் டாலர்கள் - மக்கள் பண்பாட்டிற்கு வருமா ?

Link to original Article 
அரசாங்கம் பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களுக்கு செய்து கொண்டு தான் இருக்கிறது . மக்களும் அரசாணைகளை பின்பற்றுவது பற்றி குறைவாக நினைப்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை . ஒரு குடிமகன் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து கொள்ளட்டும் . ஆனால் அது எங்கிருந்து சம்பாத்தியம் பெறப்படுகிறதோ அதற்கும் பயன் இருக்க வேண்டும் என்பதை தான் சொல்கிறது வரி என்னும் முறை . இந்திய நாட்டில் தனி நபர் சொத்து வரி , நிர்வாக வரி , வருமான வரி என்பன போன்ற இன்னும் சில வரி அமைப்பு முறைகள் நடைமுறையில் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும் . ஒரு நாட்டு குடிமகனின் தலையாய கடமை , அந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்காக அந்த குடிமகனின் பங்கு முக்கியமானது . நாட்டில் அதிகமான பல நல திட்டங்கள் இந்த வகையான வரிகள் மூலமாக செய்யபடுவது எல்லாராலும் ஏற்றுகொள்ளபட்ட உண்மை . தான் நாட்டிற்காக செலவு செய்யும் அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் வர்த்தகம் செய்யபடுகிறது . தனது தாய் பசியோடு இருக்கையில் தாய்க்கே உணவளிக்க நினைப்பார்கள் . இன்னும் சிறந்த தலைமை பண்பு ஒருமைபாடின் மூலமாக வெளிப்பட்டுவிடும் . நாம் அனைவரும் சொல்கிறோம் , இந்திய என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் . சிந்தனைக்கும்  செயலுக்கும் ஒரு நூல் அளவை விட மிக சிறிய இடைவெளியே உள்ளது . இந்திய நாட்டை உலகத்திற்கு முன்னுதாரனமாக காட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை .

அழகுக்கு அழகு சேர்க்க சில டிப்ஸ்!!!

Link to original Article 
அழகு என்றால் ஆணும் , பெண்ணும் இருவரும் தான் . ஆண் , பெண்ணின் அழகை வர்ணிக்க கற்று கொண்டான் , பெண் , ஆணின் அழகை அனுபவிக்க கற்றுக்கொண்டாள் . உடல் பராமரிப்பு இருவருக்கும் அவசியமான ஒன்று தான் . தானுடனே பிறந்து தன்னுடனே இறக்கும் இந்த உடலுக்கு பராமரிப்பு என்ற கனிவான ஒன்றை விட என்ன செய்து விடமுடியும் . பொருள்  தேடுவதில் ஆர்வம் கொண்ட ஆண் மக்கள் உடை பராமரிக்க நினைப்பதோடு மட்டுமல்லாது முயற்சியும் செய்கின்றனர் . பெண்கள் தனது சருமத்தை கணவனுக்கு அழகாக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு பல நேரங்களில் வெற்றி பெறுகின்றனர் . தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுப்பது எப்போதுமே ஒரு விதமான மகிழ்ச்சியை மனதிற்கு தரும் . ஆணும் , பெண்ணும் இணையும் சந்தோசமே குழந்தையின் வெளிப்பாடாக இருக்கிறது . மனித வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் இனிதாக் ஆக்கி கொள்ள துணைகள் இணைந்தே இருப்பது தான் சாலச் சிறப்பு .

சாலையில் மட்டுமல்ல பாட சாலையிலும் கவனம் தேவை!!!


Link to Original Article 


சாலையில் பார்த்து கவனமாக போ மகனே என்ற குரல் . சாலைக்கு மட்டும் கவனம் இருந்தால் போதுமா நண்பர்களே . பாட சாலையிலும் அதே கவனம் இருப்பது நல்லது . குளிர் காலம் , வசந்த காலம் , மழை காலம் என்ற வரிசையில் இது தேர்வு காலம் . தேர்வு காலம் என்பதை விட தேர்வு திருவிழா என்று சொல்வது தான் முறையாக இருக்கும் . ஒரு வருட உழைப்பின் பலனை அறிவிப்பதே இந்த தேர்வு தானே . பேப்பர் , பேனா , மை , கடிகாரம் , அளவு கோல் திருவிழாக்களை சிறப்பாக சித்து முடிக்க உதவுகின்றன . காலை விழித்தவுடன் அறிவுக்கு விருந்து கொடுப்பதை விட பெரிய விருந்து ஒன்றும் இல்லை . காலையில் சாப்பிட்ட விருந்தை மாலையில் அசை போடுவதும் ஒரு தனி சுகம் தான் . ஒரு மாணவனுக்கு தாய் , தந்தை , ஆசிரியர் , நண்பன் இவர்களை விட சிறந்த தூண்டு கோல் இருக்க முடியுமா . நான் எதற்காக கல்வி கற்கிறேன்  என்று ஒரு மாணவன் கேட்டல் அவன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் என்பது உறுதி . நான் யாருக்காக கல்வி கற்கிறேன் என்று ஒரு மாணவன் கேட்டல் அவன் சமுதாய சிந்தனை பெற்று விட்டன என்பதே உண்மை . 1+1 என்பதை கூட்டல் செய்தால் 2 வரும் என்பது கணிதவியல் . நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்யும் பொது அது இன்னும் அதிகரிப்பது வாழ்வியல் . புரிந்து படிப்பது என்பது தனி சுவை . சுவையான உணவை தானே நாம் அனைவரும் விரும்புவோம் . சிந்தனை செய் மனமே .

Tuesday, December 17, 2013

ஜன் லோக்பால் என்றால் என்ன?

Link TO Original Article 
ஒட்டுமொத்த இந்தியாவை மட்டும் அல்லது உலகத்தார் அனைவைரையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் . இந்த  ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளவது நமது அவசியமாகும் .
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.
லோக்பால் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசின் முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.
ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
"ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்,வேண்டுகோள்,அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
குடிமக்கள் பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஜன் லோக்பால் மசோதவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஹசாரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். நான்கு நாட்கள் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த ஆதரவை தொடர்ந்து மத்திய அரசு இறங்கி வந்தது.
லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு அரசு குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஈடாக சிவில் சமூகத்திலிருந்தும் ஒரு குழுவை அமைக்கவும், இந்த இரண்டு குழுக்களும் கலந்தாலோசோத்து லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு ஒப்புக்கொண்டது.
அதன் பின்னர் இரண்டு தரப்பும் பல முறை கூடி ஆலோசித்தும், ஹசாரே குழுவினர் வலியுறுத்தியபடி, நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகிய தரப்பினரை மசோதாவில் உள்ளடக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதனையடுத்து இருதரப்புமே தனித்தனியாக தங்களது கண்ணோட்டத்தில் தனித் தனி மசோதாக்களை உருவாக்கின.

இதனைத் தொடர்ந்து அந்த பல் இல்லாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில்தான், அந்த மசோதவை "ஜோக் பால் மசோதா" என்று ஹசாரே குழுவினர் விமர்சித்தனர். அதே சமயம் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே அறிவித்தார்.
ஆனால் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே, காவல்துறை விதித்த நிபந்தனைகளை ஏற்கமறுப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறி அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. ஆனால் ஹசாரேவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டதை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது.
ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தாத வரை சிறையிலிருந்து வெளியே வர மறுத்து தமது உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹசாரே, டெல்லி காவல்துறை நிபந்தனைகளை தளர்த்திய பிறகே நேற்று சிறையிலிருந்து வெளியே வந்து,தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சிலர் ஹசாரேவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை விமர்சிக்கிறார்கள்.உண்ணாவிரத போராட்டத்தினாலெல்லாம் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார்கள்.ஆனால் இப்படியே சொல்லிக்கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் இதனை அனுமதிப்பது? எதற்கும் ஒரு தொடக்கப் புள்ளி வேண்டாமா? அந்த தொடக்கப்புள்ளியாக ஏன் ஹசாரேவின் போராட்டத்தை பார்க்கக் கூடாது?
இந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஜன் லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
1) ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அளவில் "லோக்பால்" மற்றும் மாநில அளவில் "லோக்ஆயுக்தா" அமைக்கப்படும்.
2) உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவை முற்றிலும் அரசின் சுயேட்சை அமைப்பாக இயங்கும்.அவர்களது விசாரணையில் எந்த ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரியும் தலையிட முடியாது.
3) ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும், வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.
4) ஊழல் மூலம் அரசாங்க கஜானாவுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடை, தண்டனை விதிக்கப்படும்போதே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்படும்.
5) இது சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்றால், அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்துகொடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.
6) எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது ( வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு வேண்டி போன்ற )விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
7) அதே சமயம் லோக்பால் அமைப்பில் ஊழல்வாதிகளையும், பலவீனமானவர்களையும் உறுப்பினர்களாக அரசாங்கம் நியமித்தால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் லோக்பால் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளால் அல்லாமல் நீதிபதிகள், குடிமக்கள் மற்றும் அரசமைப்பு அதிகாரிகளால் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
8) லோக்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பினர் ஊழல் செய்தால் என்ன செய்யலாம்? லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வெளிப்படையாக நடைபெறும் என்பதால், புகாருக்கு ஆளாகும் லோக்பால் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபணமானால் இரண்டு மாத காலத்திற்குள் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
9) தற்போதுள்ள ஊழல் தடுப்பு ஏஜென்சிகள் என்னவாகும்? மதிய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி), சிபிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை லோக்பாலுடன் இணைக்கப்படும்.எந்த ஒரு அதிகாரி, நீதிபதி அல்லது அரசியலாவாதியையும் தன்னிச்சையாக விசாரித்து வழக்கு தொடரும் அதிகாரமும், அரசு எந்திரமும் கொண்ட முழு அதிகாரமிக்க அமைப்பக லோக்பால் திகழும்.
10) ஊழலால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக குரல் கொடுப்பவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் கடமை லோக்பாலுக்கு உண்டு.

Wednesday, December 11, 2013

காணவில்லை..!!! காணவில்லை...! காணவில்லை..!

காணவில்லை..!!! காணவில்லை...! காணவில்லை..!


இஸ்லாமிய சட்டம் காட்டு மிராண்டி சட்டம் என்று - டிவியில் பிச்சை எடுத்து வயிற்றை கழுவ கூவி திரிந்த ஊடக விமர்சகர்கள் காணவில்லை.. ..! ஏதாவது முஸ்லிம் நாடுகளில் - தீர விசாரிக்க பட்டு தண்டனை கொடுக்கபட்டால் - கொடுக்கு மாறி - டிவியில் - வந்து அவன் கொடுக்கும் எச்சி காசை வாங்கி கொண்டு தூற்றும் கயவர்கள் ஊடக விமர்சக வெங்காயங்கள் தலைமறைவு. என் சிங்கபூர் தண்டனையே பற்றி - இந்த வெங்காயங்கள் பேசாவில்லை? சிங்கப்பூர் சாலை விபத்தில் தமிழர் மரணம் : கலவர வழக்கில் இன்று மேலும் 8 பேர் கைது 7 வருட சிறைதண்டனை + ரோத்தான் சவுக்கடி சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் சக்திவேல் குமாரவேலு (33) என்ற தமிழர் பலியானார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது 16 போலீஸ் வாகனங்கள் உட்பட 25 வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதில் 39 போலீசாரும் பொதுமக்களும் காயமடைந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட இந்த கலவரம் இரண்டு மணிநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடுமையான சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்படும் சிங்கப்பூரில் 40 வருடங்களுக்கு முன்புதான் இதுபோன்ற கலவரம் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் வெளிநாட்டவர் 3 பேர் உள்பட 24 இந்தியர்களும் நேற்று கைதுசெய்யப்பட்டனர். கலவரத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து இன்றும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அதிகமானோர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் 3 வாகனங்களில் இன்று நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றனர். மிகவும் சோகத்துடன் காணப்பட்ட அவர்களில் 24 பேர் மீது மோசமான கலவர வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவானது தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 7 வருட சிறைதண்டனையும், ரோத்தான் அடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த விசாரணை வரும் 17-ம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்த விசாரணைக்குழு இந்த வார இறுதியில் அமைக்கப்படும். கைது செய்யப்பட்டவர்களுக்கு வாதாட 10 வழக்கறிஞர்கள் முன்வந்து இருக்கின்றனர்

Monday, December 9, 2013

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக சீமாந்திரா காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்

Link to original Article - Dinamani
தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்துள்ள மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீûஸ, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர், மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் வழங்கியுள்ளனர்.
இதேபோல், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, மீரா குமாரிடம் தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள தெலங்கானா பகுதிகளைப் பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவுக்கு அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான சாம்பசிவ ராவ், சப்பம் ஹரி, அருண் குமார், சாய் பிரதாப், ராஜகோபால், ஹர்ஷகுமார் ஆகிய 6 பேர், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அனுமதி கோரி, அதற்கான நோட்டீûஸ மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களான நாராயண ராவ், சிவபிரசாத், நிம்மாலா கிறிஸ்டப்பா, வேணுகோபால ரெட்டி ஆகியோரும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களான அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேகபதி ராஜமோகன் ரெட்டி, எஸ்.பி.ஒய். ரெட்டி ஆகிய 3 பேரும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான நோட்டீûஸ மீராகுமாரிடம் தனித்தனியாக வழங்கினர்.
பிற கட்சிகளுடன் பேச்சு: இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, நோட்டீஸ் அளித்துள்ள சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தேவையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், மத்திய காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற, தங்களது நடவடிக்கைக்கு பிற கட்சிகளும் ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டனர். சிவசேனா, அஇஅதிமுக, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தெலுங்கு தேசம் கட்சி பேசி வருவதாகவும் அக்கட்சியின் எம்.பி. வேணுகோபால ரெட்டி குறிப்பிட்டார்.
புதிய பிரச்னை: 15வது மக்களவை கூட்டத் தொடரில், இதுவரை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் மக்களவையில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, 50 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 19 எம்.பி.க்களே இருந்ததால், அவரது முயற்சி பலனிக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால், தற்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீûஸ காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 6 பேரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 4 பேரும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரும் அளித்துள்ளனர். இதற்கு பிற கட்சிகள் ஆதரவு அளிக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், தெலங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவுக்கு எதிராக அக்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகவே இது கருதப்படுகிறது. இதனால் தில்லி அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இந்தியர் பலி எதிரொலி - தமிழர்கள் கதறல்...


சிங்கப்பூரில் வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்றுள்ளது. மக்கள் தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 இந்தியர்கள் , 2 வங்கதேச நபர்கள் மற்றும் 1 சிங்கப்பூர் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருத்து வரும் செய்திகள்  தெரிவிகின்றன . இது குறித்து சிங்கபூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவிக்கையில் , இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் , மேலும்  குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார். பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கலவரத்திர்க்கான முக்கிய காரணமாக இனவெறி இருக்கும் எனவும் சந்தேகிக்கபடுகிறது . சீனர்களுக்கு அடிப்படையில் இந்தியர்களை பிடிப்பதில்லை எனவும் , முக்கியமாக தமிழர்களை மிகவும் வெறுக்கிறார்கள் எனவும் சிங்கப்பூரிலிருந்து வரும் செய்தி  குறிப்புகள் தெரிவிக்கின்றன . இந்தியர்களின்  மீதான நீண்ட காண வெறுப்பின் வெளிப்பாடாகவே இந்த கலவரம் இருந்துள்ளது என சிங்கபூர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர் . தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள இந்த சூழலில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் வாழ் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் .

NEW YEAR & x MAS ORDERS BOOKING OPEN

NEW YEAR & x MAS ORDERS BOOKING OPEN
 MUBARAK BIRYANI - KILPAUK , CHENNAI - 600 010 .
QUALITY & HALAL FOODS